For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரோட்டையே காணோம்... போட்டதாக கணக்கு காட்டி சுருட்டிய கடையநல்லூர் நகராட்சி தலைவி!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் சாலையே போடாமல் கணக்கு காட்டி பணத்தை சுருட்டியதாக நகராட்சி தலைவி மீது லஞ்ச ஓழிப்பு போலீசார் வழக்கு பதிவ செய்துள்ளனர்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்நதவர் வழக்கறிஞர் அருள்ராஜ். இவர் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஒரு புகார் மனு அனுப்பியுள்ளார்.

புகாரில், 36 தெருக்களில் ரூ.6 கோடியோ 94 லட்சத்தில் தார் சாலை போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்மான எண் 405ன் அடிப்படையில் மாநில அளவிலான மின்னணு ஒப்பந்த புள்ளி அடிப்படையில் மறு டெண்டர் விடப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த 36 சாலை பணிகளில் பல முக்கிய பணிகளை செய்யாமல் தார்சாலை போட்டதாக அரசு ஓப்பந்தகாரக்களிடம் பேரம் பேசி போலியாக ஆவணம் உருவாக்கி பல கோடி ரூபாயை நகராட்சி தலைவி உள்பட 6 பேர் மோசடி செய்துள்ளதாக புகாரில் கூறப்படுள்ளது.

இதுகுறித்து நெல்லை நகராட்சி நிர்வாக இயக்குனர், நகர்மன்ற துணை தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையாளர், ஆகியோருககு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுககப்படவிலலை.

பல தெருக்களில் தார் சாலை போடாமல் பணிகள் முடிவுற்றதாக ஆவணங்களை உருவாக்கி ஒப்பந்தகாரர்கள் பெயரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் அரசு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கடையநல்லூர் நகராட்சி தலைவி சைபுன்னிசா, நகராட்சி பொறியாளர் அமகது அலி, அபபோதைய நகராட்சி பொறியாளர் பிரின்ஸ், ராஜேந்திரன், விஜயகுமார், நெல்லை மண்டல பொறியாளர் கனகராஜ், ஒப்பநதக்காரர்கள் கிருஷ்ணாபுரம் அருணாசலம், சங்கரன்கோவில் ராஜா முகமது ஆகியோர் மீது ஊழல் தடுப்பு உள்பட பல்வேற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

சாலையே போடாமல் போட்டதாகக் கூறி பல கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில் நகராட்சித் தலைவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

English summary
8 Have been Booked by police include kadayanallur municipal Chairman For tender Scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X