For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் 100 நாள் சாதனை பட்டியல் இது தான்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று 100 நாட்கள் ஆவதையொட்டி 'நிலையான ஆட்சி-நிரந்தர வளர்ச்சி' என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

The Govt of Tamil Nadu has issued statement about Edappadi palanisamy's 100 day record

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது
  • மீனவர்கள் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1,75,000 வீதம் 5,000 வீடுகள் கட்ட ஆணை
  • குடிநீர் பற்றாக்குறையை போக்க பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன
  • மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • மீனவர்கள் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ரூ.1.75 லட்சம் செலவில் 5 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது
  • வேளாண் உற்பத்தி அதிகரித்து 1,58,000 விவசாயிகளுக்கு ரூ.882 கோடி பயிர்க்கடன்
  • தென்னையில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது
  • ஆயிரத்து 161 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
  • வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது
  • ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 187 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
  • பள்ளிக் கல்வித்துறை மூலம் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது
  • ரூ.200 கோடி செலவில் அம்மா வாகன திட்டத்தில் முதல்வர் கையெழுத்து போடப்பட்டுள்ளது
  • தமிழகம் முழுவதும் 169 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
  • ரூ.65 கோடியில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
  • போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.1,250 கோடி ஓதுக்கீடு
  • 400 கோடியில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள்.
  • தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-க உயர்வு.
  • ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்கல்.
  • விழுப்புரம், ராமநாதபுரம், தருமபுரியில் புதிய சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
English summary
tamilnadu governement has issued statement about Edappadi palanisamy's 100 day record
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X