For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் விழுந்த ஜிஎஸ்எல்வி ”கேர்” – கடற்படை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைத்தது!

Google Oneindia Tamil News

சென்னை: விண்வெளிக்கு மனிதனை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு, ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட கப் கேக் வடிவிலான கேர் என்ற உபகரணம் பத்திரமாக கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கடலில் விழுந்த "கேர்" விண்கலம் கடற்படையால் மீட்கப்பட்டு இஸ்ரோவிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று காலை இஸ்ரோவால் வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுடன் 3 பேர் தங்கும் வசதியுடன் கூடிய "கேர்" விண்கலம் இணைக்கப்பட்ட்டிருந்தது.

The Indian Coast Guard recovers the CARE module…

இதில் மனிதன் உயிர்வாழ்வதற்கான அனைத்து அம்சங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இதன் எடை 3,735 கிலோ. 2.7 அகலமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது. இது கடலில் விழும் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த 2 பாராசூட்களும் பொருத்தப்பட்டு இருந்தன.

126 கிலோ மீட்டர்கள் ராக்கெட் பயணித்து சோதனை வெற்றியடைந்ததை அடுத்து இப்பகுதி அந்தமான் கடல்பகுதியில் விழச்செய்யப்பட்டது. மேற்கொண்டு ஆய்வுகளுக்காக அப்பகுதி கடற்படையால் மீட்கப்பட்டு இன்று இஸ்ரோ தலைமை அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

English summary
The CARE module performance matched the predictions bit by bit. It splashed down in Bay of Bengal, very close to the expected location. The module has been recovered with help from the Indian Coast Guard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X