For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குல தெய்வக் கோயிலில் திருட்டு - வீடியோ

ஈரோடு அருகில் உள்ள சித்தோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குல தெய்வக் கோயிலில் உண்டியல் பணம் திருட்டுப் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குலதெய்வக் கோயில் உண்டியலில் இருந்த பணம் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குல தெய்வக் கோயில், ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் நசியனூரில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு பலமுறை குலதெய்வக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.

Theft in CM's ancestral temple in Erode

அதனால் இக்கோயிலை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குல தெய்வக் கோயிலில் அசம்பாவிதம் நடைபெற்றது முதல்வருக்கு அபசகுனம் என சுற்றுவட்டார மக்கள் கூறுகின்றனர்.

English summary
In CM Edappadi Palanisamy's ancestral temple somebody broke the lock and abducted money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X