For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை.. நாங்க ஒன்னாதான் இருக்கோம்.. சத்தியம் செய்யும் ஜெயக்குமார்!

அதிமுகவில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எந்த ஒரு பிரச்சனையுமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 123 எம்எல்ஏக்களும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்றோம் அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து கடந்த வாரமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு கோஷ்டியினரும் மாறி மாறி பேசியதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு இழுபறி நிலவி வருகிறது.

நேற்று சேலத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்களுடன் செம்மலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஈபிஎஸ் அணியினருடன் சேரவேண்டாம் என ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு இழுக்கும் அமைச்சர்

பேச்சுவார்த்தைக்கு இழுக்கும் அமைச்சர்

இதையடுத்து இரு கோஷ்டிகளும் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது கேள்விக்குறியானது. இந்நிலையில் அமைச்சர் ஜெக்குமார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

காலம் கனிந்துவிட்டது

காலம் கனிந்துவிட்டது

அப்போது கோஷ்டி இணைப்பு பேச்சுவார்த்தைக்கு காலம் கனிந்துவிட்டது என அவர் கூறினார். இரு கோஷ்டிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த் வெளிப்படையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

123 எம்.எல்.ஏக்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் அதிமுகவில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தை நடத்த காலம் கனிந்துவிட்டது என்றும் பேச்சுவார்த்தை நடத்துவது காலத்தின் கட்டாயம் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மழுப்பிய ஜெயக்குமார்

மழுப்பிய ஜெயக்குமார்

இரு அணிகள் தனித்தனியாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் மழுப்பியவாறே அம்மாவின் கனவை நிறைவேற்றவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுவதாக கூறினார்.

English summary
Jayakumar telling that this is the time for the talk between two teams. There is no conflicts in the team he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X