டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்

இரட்டை இலைச்சின்னத்தை பெற டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறார் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை பெற டிடிவி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றிருக்கிறார் என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தை பெறுவதற்காக சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் சுகேஷ் சந்திரா என்ற டெல்லி தொழிலதிபரிடம் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியுள்ளார். இதற்காக முதற்கட்டமாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை அவர் கொடுத்துள்ளார்.

டிடிவி தினகரன் தரப்பிடமிருந்து பணம் பெற்றது உண்மைதான் என்றும் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தினகரனுக்கு சம்மன்

இதுதொடர்பாக டிடிவி.தினகரன் நேரில் ஆஜராக டெல்லிஸ் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம்

டிடிவி.தினகரனின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தேர்தல் ஆணையத்துக்கே டிடிவி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றிருப்பதாக குற்றம்சாட்டினார்.

அதிர்ச்சியளிக்கிறது - திருமா

மேலும் தேர்தல் ஆணையத்தை ஊழல்மயப்படுத்த தினகரன் முயற்சித்திருப்பதாகவும் திருமாவளவன் சாடியுள்ளார். தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயன்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

வருத்தம் அளிக்கிறது

தேர்தல் ஆணையத்தையே விலைபேச முடியும் என டி.டி.வி. தினகரன் நினைப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
VCK Party leader Thirumavalavan accuses that TTV Dinakaran tried to give bribe to the election commission. Its Shocking Thiruma said.
Please Wait while comments are loading...