கமலுக்கு இல்லாத உரிமையா, அது என்ன மிரட்டுவது.. அமைச்சர்களுக்கு திருநாவுக்கரசர் சூடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசை விமர்சித்ததற்காக அமைச்சரே கமல் மீது வழக்குப் போடுவோம் என கூறியிருப்பது ஜனநாயக விரோதம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் மிரட்டி வருகின்றனர்.

Thirunavukarasar condemns Tamilnadu ministers for threatening Kamal

இதனால் நடிகர் கமலுக்கு ஆதரவாக ஆதரவு பெருகியுள்ளது. ஏற்கனவே ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நடிகர் கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், அரசை விமர்சித்ததற்காக அமைச்சரே கமல் மீது வழக்குப் போடுவோம் என கூறியிருப்பது ஜனநாயக விரோதம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவருக்கும் உள்ள உரிமை நடிகர் கமல்ஹாசனுக்கு இல்லையா? என்றும் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். அமைச்சர்கள் தங்களது போக்கை கைவிட வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார்.

Bigg Boss Tamil, TN political leaders oppose TV Channel-Oneindia Tamil

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Congress leader Thirunavukarasar condemns Tamilnadu ministers for threatening Kamal. He said Ministers threaten against Kamal is anti democratic.
Please Wait while comments are loading...