ரஜினியை சந்தித்தார் திருநாவுக்கரசர்... நட்பு ரீதியான சந்திப்பு என விளக்கம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் பதவியேற்ற திருநாவுக்கரசர், நடிகர் ரஜினியை இன்று நேரில் சந்தித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் திருநாவுக்கரசர். அதனைத் தொடர்ந்து முக்கிய கட்சித் தலைவர்களை நேரில் அவர் சந்தித்து வருகிறார்.

Thirunavukkarasar meets Rajini

அந்தவகையில் நடிகர் ரஜினியை இன்று அவர் நேரில் சந்தித்தார். தனுஷ் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்ததாக விளக்கமளித்தார்.

Thirunavukkarasar meets Rajini

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது அல்ல. எனக்கும் ரஜினிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அதன் அடிப்படையில் இன்று அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தேன். மேலும் அவரது கபாலி பட வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்தேன். இதேபோல், ரஜினியும் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றதற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்தார்" என்றார்.

ஏற்கனவே, ரஜினியை தங்கள் பக்கம் இருக்க பாஜக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ரஜினியை நேரில் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

English summary
Tamil Nadu Congress Committee president Thirunavukkarasar on Thursday met actor Rajinikanth at his Chennai residence.
Please Wait while comments are loading...

Videos