For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயிர் காப்பீடு கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் - வீடியோ

பயிர்காப்பீடு வழங்கக் கோரி திருவாடானை பகுதி விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    ராமநாதபுரத்தில் விவசாயிகள் உண்ணாவிரதம்-வீடியோ

    ராமநாதபுரம்: திருவாடானை பகுதி விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    திருவாடானை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை சரிவர இல்லாத காரணத்தால் விவசாயப் பயிர்கள் நாசமடைந்தன. அதனால் 2015, 2016ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    Thiruvadanai region farmers staged protest demanding crop insurance

    இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தை எம்.எல்.ஏ ராமசாமி தலைமையேற்று நடத்தினார். மாவட்ட நிர்வாகத்திடமும் அரசிடமும் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்துவேன் என அவர் கூறினார்.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குத் தாசில்தார் வந்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு, விரைவில் ஒரு ஏக்கருக்கு 5, 200 ரூபாய் வீதம் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க ஆவண செய்யப்படும் எனக் கூறினார்.

    English summary
    Thiruvadanai region farmers staged protest demanding crop insurance. Nearly 2000 farmers participated in this protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X