For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

500 கிலோ வெயிட் கூடிருச்சு.. டெய்லி வாக்கிங் போகும் திருவண்ணாமலை ருக்கு!!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வுக்குப் போய் விட்டு வந்தாலும் வந்தார்கள், தமிழகத்தின் பல்வேறு கோவில் யானைகளின் எடை செமத்தியாக கூடி விட்டது. இதனால் ஆளாளுக்கு வாக்கிங் கூட்டிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்களாம் - எடையைக் குறைக்க.

தமிழக அரசு வருடா வருடம் நடத்தும் யானைகள் புத்துணர்வு முகாமில் வழக்கம் போல இந்த ஆண்டும் ஏராளமான கோவில் யானைகள் கலந்து கொண்டன.

முகாம் முடிந்து தற்போது அவை அனைத்தும் தத்தமது கோவில்களுக்குத் திரும்பி விட்டன.

அடேங்கப்பா எடை

அடேங்கப்பா எடை

யானைகளுக்கு முகாமில் நல்ல கவனிப்பு கிடைத்தது என்பதால் ஆளாளுக்கு வெயிட் ஏறிப் போய்க் காணப்படுகின்றன.

ருக்கு கதையைக் கேளுங்க

ருக்கு கதையைக் கேளுங்க

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் யானை ருக்குவும் முகாமுக்குப் போய் விட்டு வந்தது. அங்கு ருக்குவுக்கு நல்ல சாப்பாடு, மருத்துவ சிகிச்சை என சகலமும் கிடைத்தது. இதனால் ருக்கு புதுப் பொலிவுடன், புத்துணர்ச்சியுடன் திரும்பியுள்ளது.

மேள தாள ஆரத்தியுடன் வரவேற்பு

மேள தாள ஆரத்தியுடன் வரவேற்பு

முகாமுக்குப் போய் விட்டுத் திரும்பிய ருக்குவுக்கு திருவண்ணாமலை வந்ததும் கோவிலில் மேள தாளம் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

வெயிட்டைப் பாரு

வெயிட்டைப் பாரு

முகாமுக்கு செல்வதற்கு முன்பாக ருக்குவின் எடை 4900 கிலோ எடை இருந்தது. தற்போது 500 கிலோ அதிகரித்து 5400 கிலோ எடை உள்ளது.

இது ஓவர் பாஸ்!

இது ஓவர் பாஸ்!

இப்படி அதிரடியாக 500 கிலோ எடை கூடியதால் டயட் கன்ட்ரோலுக்கு அறிவுறுத்தியுள்ளனராம் கால்நடை மருத்துவர்கள்.

அரிசியே சாப்பிடப்படாது!

அரிசியே சாப்பிடப்படாது!

அரிசியை கண்ணிலேயே காட்டாதீர்கள் என்று கூறியுள்ளனராம் டாக்டர்கள். அரிசி சாப்பாட்டை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆலோசனை கூறியுள்ளனராம்.

நல்லா நடக்க வைங்க

நல்லா நடக்க வைங்க

மேலும் தினசரி 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் காலையும், மாலையும் 2 வேளை கோவிலைச் சுற்றி நடக்க வைத்து வருகிறாராம் பாகன்.

கொள்ளு, பச்சரிசி, பாசிப் பருப்பு மட்டும்தான்!

கொள்ளு, பச்சரிசி, பாசிப் பருப்பு மட்டும்தான்!

மேலும் டயட் லிஸ்ட்டையும் கையோடு கொடுத்து அனுப்பியுள்ளனராம். உணவாக பச்சரிசி, பாசிபருப்பு, கொள்ளு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

English summary
Thiruvannamalai temple elephant Rukku has been put on diet after it gaine 500 kg in the Elephant camp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X