For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜட்டியுடன் பிணமாகக் கிடந்த டிஎஸ்பி மகன்... தவறி விழுந்து இறந்தாரா? திட்டமிட்ட மரணமா?

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த டி.எஸ்.பி மகன் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது இயல்பான மரணம்தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் சோமசுந்தரம். இவரது மகன் அருண். இவர் மலேசியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில், வணிக மேலாண்மை குறித்த உயர்கல்வி கற்று வருகிறார்.

அருணின் சொந்த சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள காந்தி நகர் ஆகும். அங்குள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவுக்காக மலேசியாவிலிருந்து அருண் திருச்சிக்கு விமானம் மூலமாக வந்துள்ளார்.

பின்னர், இரவு நாமக்கல் வந்த அருணும், அவரது நண்பர் ஒருவரும் நாமக்கல், சேலம் சாலையிலுள்ள பாண்டியன் வளாகம் அருகிலிருக்கும் ஒரு தனியார் விடுதியில் கார்த்திகேயன் என்ற பெயரில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

காலை ஆறு மணியளவில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகன் அருண் தங்கியிருந்த லாட்ஜ் தரை தளத்தின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஜட்டியுடன் பிணமாக கிடந்தார்.

அவர் மர்மமான முறையில் இறந்திருப்பது தெரியவந்தது. அவருடன் தங்கியிருந்த அவரது நண்பர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார்.

இச்சம்பவம் குறித்து லாட்ஜ் ஊழியர்கள் நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருண் உடலை மீட்டு நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இரண்டாவது மாடியிலுள்ள அறையில் தங்கியிருந்த அருண் இரவு நெடுநேரம் செல்பேசியில் பேசிக்கொண்டே அறையின் முன்னுள்ள இடத்தில் நடந்துகொண்டே இருந்ததாகவும், கவனக்குறைவாக கீழே விழுந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இருப்பினும், இந்த மரணம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Tirupur DSP’s second son accidently fell down from a 2nd floor of a lodge. Police filed case and investigating about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X