For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூப்பர் சீனியர்கள் முதல் முதல் முறை வேட்பாளர்கள் வரை.. தமாகா வேட்பாளர்கள் பயோடேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பல பழைய தலைவர்களுக்கு சீட் கொடுத்துள்ளார் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். இத்தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

தமாகா வேட்பாளர்களின் பயோடேட்டா:

ராயபுரம்:

பிஜு சாக்கோ பிஜு சாக்கோ போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தமாகாவுக்கு வந்தவர். வாசனின் தீவிர ஆதரவாளர். கடந்த 2009 லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டவர். பிடெக் படித்தவர். இளைஞர் காங்கிரஸில் முன்பு பணியாற்றியவர். ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

மயிலாப்பூர் -

முனவர் பாஷா போட்டியிடுகிறார். 62 வயதான பாஷா, தீவிர வாசன் ஆதரவாளர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக இருக்கிறார். நியூ கல்லூரியில் படித்தவர். நியூ கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சமூக சேவகர். அன்னை இல்லம் என்ற முதியோர் இல்லத்தை மயிலாப்பூரில் நடத்தி வருகிறார். அதேபோல கோடம்பாக்கத்தில் அன்னை உள்ளம் என்ற இன்னொரு இல்லத்தையும் நடத்தி வருகிறார்.

காட்பாடி -

டி.வி.சிவானந்தம் தமாகா வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவர் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். காட்பாடியில் கல்வி உலகம் என்ற பெயரில் பள்ளிகளை நிர்வகித்து வருகிறார்.

அணைக்கட்டு -

அணைக்கட்டு தொகுதி தமாகா வேட்பாளராக பி.எஸ். பழனி போட்டியிடுகிறார்.

வாணியம்பாடி -

மூத்த தலைவர்களில் ஒருவரான ஞானசேகரன் ஞானசேகரன் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 1991ம் ஆண்டிலிருந்து வேலூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர். தற்போது வாணியம்பாடிக்கு வந்துள்ளார். கடந்த 2011 தேர்தலி்ல அதிமுகவின் வி.எஸ். விஜய்யிடம் தோற்றவர் இவர்.

பர்கூர் -

ஏ.ஆர்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர் அனைவரிடமும் இயல்பாகப் பழகக் கூடியவர். முன்னாள் ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்தவர். ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் பர்கூரில் போட்டியிடுகிறார். ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு.

கிருஷ்ணகிரி -

ஜெயபிரகாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறார்.

திருக்கோவிலூர் -

கணேஷ். 35 வயதான கணேஷ் பத்தாம் வகுப்பு படித்தவர். தொழிலதிபர். மாவட்டத் தலைவராக இருக்கிறார்.

சங்ககிரி -

கே. செல்வகுமார். கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தமாகாவின் ஆரம்பகால உறுப்பினர். தற்போது நாமக்கல் மாவட்டத் தலைவராக இருக்கிறார். கொங்கு வேளாள கவுண்டர்.

சேலம் வடக்கு -

மூத்த தலைவர் ஆர். தேவதாஸ் போட்டியிடுகிறார். ஹோட்டல், கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்டவர். ஜி.கே.வாசனுடன் காங்கிரஸலிருந்து வெளியேறி வந்தவர். தமாகா சேலம் மத்திய மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 1996ல் தமாகா சார்பில் சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நாமக்கல் -

இளங்கோ. இவரை கோஸ்டல் இளங்கோ என்றால்தான் தொகுதியில் தெரியும். நாமக்கல் கிழக்கு மாவட்ட தமாகா தலைவராக இருக்கிறார். மேலும், நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

பெருந்துறை -

வி.பி.சண்முகம். பி.ஏ.பட்டதாரி. விவசாயம், கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளார். கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். 1992 முதல் 1996 வரை பெருந்துறை வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர். 1996 முதல் 2001 வரை பெருந்துறை வடக்கு வட்டார தமாகா தலைவர். 2002 முதல் 2013 வரை ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர். 2013 வரை ஈரோடு தெற்கு மாவட்ட சிறப்பு அழைப்பாளர். தற்போது, தமாகா ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவராக உள்ளார்.

மேட்டுப்பாளையம் -

டி.ஆர். சண்முகசுந்தரம். காரமடையைச் சேர்ந்தவர். ஒக்கலிகா கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை டி.எஸ் ரங்கசாமி கவுடர். விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். 1975-இல் இளைஞர் காங்கிரஸ் காரமடை வட்டாரத் தலைவராகவும், 1980 முதல் 1990 வரை இளைஞர் காங்கிரஸ் கோவை மாவட்டச் செயலராகவும், 1996 முதல் 2003 வரை த.மா.கா வட்டாரத் தலைவராகவும், 2004 முதல் 2014 வரை இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். தற்போது தமாகா மாநில செயலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மடத்துக்குளம் -

ஏ.எஸ். மகேஸ்வரி. தியாகி கோவை சீனிவாசனின் மகள். வழக்கறிஞர். கோவை மேற்குத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். தமாகாவின் ஒரே பெண் வேட்பாளர் இவர்தான்.

கிருஷ்ணராயபுரம் (தனி) -

கே. சிவானந்தம். 51 வயதான சிவானந்தத்திற்கு சொந்த ஊர் மாயனூர், பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். விவசாயமும் பார்க்கிறார். தமாகா மாவட்ட துணைத் தலைவர், மாணவர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலாளர், கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர், மாயனூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் என பொறுப்புகள் வகித்துள்ளார்.

முசிறி -

ராஜேசகரன். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் தமாகாவுக்குக் கிடைத்த ஒரே தொகுதி முசிறிதான். அங்கு முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திருச்சி வடக்கு மாவட்ட தலைவராக இருக்கிறார். 53 வயதான ராஜசேகரன் திருப்பராய்த்துறையைச் சேர்ந்தவர். 1989ல் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார். 1999ல் திருச்சி எம்.பி தொகுதியில் போட்டியிட்டார். 2011 தேர்தலில் பெரம்பலூரில் போட்டியிட்டார். மூன்றிலும் அவர் தோல்வியுற்றார். 2006 தேர்தலில் தொட்டியம் தொகுதoியில் போட்டியிட்டு 53 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்.

கடலூர் -

ஏ.எஸ். சந்திரசேகரன். கடலூரில் தொகுதியில் போட்டியிடும் சந்திரசேகரன் மாநில தமாகா செயலாளராக கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்.

பூம்புகார் -

எம்.சங்கர்சங்கர். பூம்புகார் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிடுகிறார். வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இப்பகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி-தமாகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் விருப்பமாகும், இதனை நிறைவேற்ற ஒவ்வொரும் இணைந்து பாடுபடுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

பாபநாசம் -

எஸ்.டி.ஜெயகுமார். 10வது வகுப்பு படித்தவர் ஜெயகுமார். இவரது மனைவி செல்வபிரியா, உள்ளிக்கடை முன்னாள் ஊராட்சித் தலைவர். 1996-2001,2001-2006-ல் உள்ளிக்கடை ஊராட்சித் தலைவர், 2006-2011 -ல் ஊராட்சி மன்றக் கூட்டமைப்புத் தலைவராக இருந்தார். 25 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ள இவர் தற்போது பாபநாசம் வடக்கு வட்டார தமாகா தலைவராக உள்ளார்.

திருமயம் -

பிஎல்ஏ சிதம்பரம். தமாகா மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். சொந்த ஊர் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி. மருந்து வணிகம் செய்கிறார், டிரான்ஸ்போர்ட் நடத்துகிறார். திருவையாறு தியாகப்பிரம்மா மகாசபையின் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

மேலூர் -

டி.என். பாரத் நாச்சியப்பன் போட்டியிடுகிறார். வழக்கறிஞரான இவர், மதுரை அய்யர் பங்களாவில் வசிக்கிறார். கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். கட்சியில் இளைஞரணி மாநிலச் செயலாளராக இருக்கிறார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்றவர்.

கம்பம் -

ஓ.ஆர். ராமச்சந்திரன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கு ஓ.ஆர். ராமச்சந்திரன் தமாகா சார்பில் போட்டியிடுகிறார். கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவர். இத்தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். திமுக, அதிமுக கட்சிகளுக்கு கடும் போட்டி கொடுக்கக் கூடியவர். பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர். மூப்பனாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவரது தந்தை ஓ.ராமசாமி கம்பம் நகராட்சித் தலைவராக இருந்தவர்.

விளாத்திகுளம் -

கதிர்வேல். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர். ஐஎன்டியூசியில் இருந்தவர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவராக உள்ளார். இவரது மகன் பெருமாள்சாமி கடந்த தேர்தலில் போட்டியிட்டார். தற்போது பெருமாள்சாமி அதிமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார். இதனால் கதிர்வேல் விளாத்திகுளம் தொகுதியில் தமாகாவால் களம் இறக்கப்பட்டுள்ளார்.

கிள்ளியூர் -

டி. குமாரதாஸ். பழைய காங்கிரஸ் தலைவர். தீவிர மூப்பனார் விசுவாசி. தமிழக சட்டசபைக்கு கிள்ளியூர் தொகுதியிலிருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1984ல் ஜனதா கட்சி சார்பிலும், 1991ல் ஜனதாதளம் சார்பிலும், 1996 மற்றும் 2001ல் தமாகா சார்பிலும் வென்றவர். மூப்பனார் மறைவுக்குப் பின்னர் தமாகாவிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் கட்சியை தொடங்கி நடத்தி பின்னர் அதைக் கலைத்து விட்டார்.

ஸ்ரீவைகுண்டம் -

எஸ்.டி.ஆர்.விஜயசீலன் . 44 வயதாகும் விஜயசீலன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமாகா தலைவராக இருக்கிறார். கல்வியாளர். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

தென்காசி -

என்.டி.எஸ். சார்லஸ் பியூசி படித்தவர். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். முழு நேர அரசியல்வாதி. தமாகாவில் ஆரம்ப காலம் முதல் இருந்து வருகிறார். மூப்பனார் குடும்பத்திற்கு நெருக்கமானவர். மாநில பொதுச் செயலாளராக இருக்கிறார்.

English summary
TMC has fielded many old faces and few new candidateds. Here is the biodata of the TMC candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X