For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல் லயோலா கருத்துக் கணிப்பு: அதிமுகவுக்கு 34.1% பேர் ஆதரவு; திமுகவுக்கு 32.6% பேர் ஆதரவு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா தி.மு.க. வெல்லும் என்றும் அக்கட்சிக்கு 34.1% பேர் ஆதரவு அளித்துள்ளதாகவும் லயோலா கல்லூரி குழுவின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,320 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அதிமுக வெல்லும்

அதிமுக வெல்லும்

இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டும் திமுக....

மிரட்டும் திமுக....

அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர். அதாவது அ.தி.மு.க.வை விட 1.5%தான் தி.மு.க.வுக்கு ஆதரவு குறைவு.

3வது பெரிய கட்சியாக தே.மு.தி.க.

3வது பெரிய கட்சியாக தே.மு.தி.க.

தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக தே.மு.தி.க. உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தே.மு.தி.கவுக்கு 4% பேர் ஆதரவளித்துள்ளனர் என்கிறது லயோலா கணிப்பு

சமபலத்தில் பா.ம.க- பா.ஜக

சமபலத்தில் பா.ம.க- பா.ஜக

4வது இடத்தில் பா.ம.க. 3% பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி 2.9% பேர் ஆதரவை பா.ம.க.வுடன் சமபலத்தில் இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது இக்கணிப்பு.

காங்கிரஸுக்கு 1.6%

காங்கிரஸுக்கு 1.6%

தமிழகத்தில் தங்களுக்கு 5% வாக்கு வங்கி இருக்கிறது எனக் கூறுகிறது காங்கிரஸ். ஆனால் லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் 1.6%பேர் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
A survey done by the students and professors of the Loyola College said that the ruling AIADMK will win again in TN assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X