கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 200 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 200 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 200 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில்ர நறுமண பால் தயாரிப்பு ஆலை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ஜெயகுமார் முதல் முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது இலவச ஆடு மாடுகள் வழங்க ரூ182 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் 40 கோடி ரூபாய் செலவில் மதுரையில் நறுமண பால் தயாரிப்பு ஆலை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

TN Budget: 200 new Avin booths will be introduced in the college and universities

மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் புதிதாக 200 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். மீன்வளத்துறையை மேம்படுத்த 768 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.

மேலும் உணவு மானியத்துக்கு 5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
200 new Avin booths will be introduced in the college and universities announced in Tamilnadu budget.
Please Wait while comments are loading...