For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்கனவே என்ன முதலீடு செஞ்சாங்கன்னே தெரியல? 2018ல் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடாம்!

2018ம் ஆண்டில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018ம் ஆண்டு நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ரூ.75 கோடி செலவில் நடத்தப்பட்டது. முதலீடுகளை ஈர்க்க பல்வேறு மாநிலங்கள் போட்டியிட்டு வந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற இந்த மாநாடு நடைபெறுவது பெறும் முக்கியத்துவம் பெற்றது.

இந்த மாநாட்டின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்க்க தமழிக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தொழிற்சாலைகள் தமிழகத்தில் இருந்து வெளியேறி வந்த வண்ணம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எதிர்க்கட்சிகள் புகார்

எதிர்க்கட்சிகள் புகார்

2015ம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் கூட கியா என்ற மோட்டார் வாகன தொழிற்சாலை கட்டமைப்பு வசதி இல்லை, அமைச்சரே லஞ்சம் கேட்டார் என்ற குற்றச்சாட்டால் அந்த தொழிற்சாலை ஆந்திராவிற்கு இடம்பெயர்ந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அடுத்த ஆண்டு மாநாடு

அடுத்த ஆண்டு மாநாடு

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 3வது இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

முதலீட்டு விவரம்

முதலீட்டு விவரம்

தமிழகம் எப்போதுமே முதலீட்டுக்கு உகந்த சூழலில் உள்ளதாகவும் முதல்வர் கூறினார். 2011-17 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் ரூ.1.25 கோடி நேரடி அன்னிய முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதே காலகட்டத்தில்ரூ.3.07 கோடி உறுதி செய்யப்பட்ட முதலீடு கிடைத்துள்ளதாகவும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்களால் கையெழுத்தாகும் ஒப்பந்தத்தை விட மிக குறைவான அளவே நிஜத்தில் கிடைக்கும் முதலீடு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடத்த ரூ.75 கோடி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
TN Cm Palanisamy says that by 2018 World investors conference to be held at Chennai soon as per the fund already allotted in tn budget
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X