For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டுவிட்டரில் மீம்ஸ் போட்டு ஓட்டுப்போட அழைக்கும் தமிழக தேர்தல் ஆணையம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று டிவியில் ஒளிபரப்பாகும் படத்திற்கு மட்டும்தான் புரமோ போடுவார்களா என்ன? நாங்களும் போடுவோம்ல என்று களமிறங்கியுள்ளது தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளாதா என்பதைக் காண வாக்காளர்களை மீம்ஸ் போட்டு கவர்கிறது தேர்தல் ஆணையம். எல்லா மீம்ஸ்சும் சும்மா தெறிமாஸ்தான் போங்க...

அரசியல் கட்சியினர் மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் கலக்குவார்களா நாங்களும் கலக்குவோம்ல என்ற #TN100percent போட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாக்களித்தல், வாக்களிக்க இளைஞர்களை ஊக்குவித்தல், ஓட்டுக்கு பணம் தவிர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல் என பல்வேறு நடவடிக்கைகள் குறித்த சுவாரஸ்ய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. TN100percent என்ற ஹேஷ்டேகின் கீழ் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சார பகிர்வுகளை டிரெண்ட் செய்துள்ளனர்.

தலைமை தேர்தல் அதிகாரியின் ட்விட்டரில் எத்தகைய புரோமோஷன் இடம் பெற்றிருக்கிறது என்பதை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

ரஜினி ஸ்டைல்

கண்ணா நீ எங்க எப்படி ஓட்டுப்போடுவன்னு தெரியாது. ஆனா ஓட்டு போடுரு நேரத்துல வாக்காளர் பட்டியல்ல பேரு கரெக்டா இருக்கணும் என்று ரஜினி ஸ்டைலில் பதிவிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதி

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று செக் செய்யவும் - இதற்காக'நடுவுல கொஞ்சம் பேர காணோம்' என்று போட்டுள்ளனர்.

ஜோதிகாக்கா படம்

18 வயதினிலே உங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும் என்று 36 வயதினிலே பாணியில் கேட்டுள்ளனர்.

சினிமா வசனங்கள், போஸ்டர்களை மட்டுமே பயன்படுத்தவில்லை. நம் இளைஞர்கள் எவற்றிற்கு எல்லாம் டார்கெட் குரூப்பாக இருந்திருப்பார்கள் என்பதை நன்கு கணித்து சில விஷயங்களை செய்துள்ளனர்.

சக்திமான்

"உங்கள் குழந்தை பருவத்தின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமானா? அப்படியானால் நீங்கள் வாக்களிக்கும் வயதை எட்டிவிட்டீர்கள்" என்கிறது ஒரு ட்வீட். அதற்கு சக்திமான் படம் வேறு வைத்து கூடுதல் கவன ஈர்ப்பு செய்துள்ளனர். பக்ஸ் பன்னி கார்ட்டூனையும் விட்டுவைக்காமல் தொட்டுச் சென்றிருக்கின்றனர்.

வீடியோ கேம்

பஸ்ஸில் பத்து நிமிடம் பயணத்தில்கூட ஃபோனில் வீடியோ கேம் விளையாடும் இளைஞர்களை கவனத்தை பெற வாக்குப்பதிவு இயந்திரத்தின் படத்தை போட்டு இந்த கேமை விளையாடியிருக்கிறீர்களா என நம்முடைய சிந்தனையை தூண்டுகின்றனர்.

கொஞ்சம் எட்டிப்பாருங்களேன்

கொஞ்சம் எட்டிப்பாருங்களேன்

வாக்களிப்பது தொடர்பாக இன்னும் பல சுவாரஸ்ய ட்வீட்களும் இருக்கின்றன. அத்தனையும் பார்க்க twitter.com/TNelectionsCEO என்ற பக்கத்துக்குப் போய் எட்டிப்பாருங்களேன். இன்னும் சூப்பரான பகிர்வுகள் இருக்கின்றன.

English summary
TN election commissioner Twitter accounts creates memes for awareness. Oru vaati sonna podhuma? 100 vaati sollanuma? Register to vote/verify ur details today.Yenna missing? If your name is missing in the electoral rolls, u cant vote. Verify your details today!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X