For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு - ஹைகோர்ட் கிளையில் அரசு பதில்!

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை : முதல்வர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலித்தது, முறையாக மருத்துவ முகாம்கள் நடத்தாதது என தமிழகத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தாக்கல் பதில் மனுவில் கூறியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் தாக்கல் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வருவோரிடம் சில தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் இதனை கண்காணிக்க அரசு சார்பில் தனியாக குழுக்கள் அமைக்கப்படவில்லை என்றும் ரமேஷ் மனுவில் குறிப்பிட்டிருந்தார். கண்காணிப்பு குழ அமைக்க ஏற்கனவே மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில் அதை அரசு நிறைவேற்றவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

TN government admits that 346 private hospitals evaded rules in cm health insurance scheme

இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
2012 முதல் 2016 வரை சேவை குறைபாடு, கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்படி 346 தனியார் மருத்துவமனைகள் முறைகேட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது.

மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட 16 மருத்துவமனைகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 117 மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கூறப்பட்டது.

ஆனால் அதிகாரப்பூர்வமாக தனியார் மருத்துவமைனைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில் கண்காணிப்பு குழுக்கள் பெயர் அளவிலே உள்ளதாகவும், தனி அலுவலகம் கொண்டு அவை செயல்படவில்லை என்று மனுதாரர் குறிப்பிட்டார். இரு தரப்பும் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

English summary
Tamil Nadu government says in Madras Highcourt's Madurai bench as 346 private hospitals evaded the rules in TN CM Health insurance system
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X