தேவைப்பட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் - ஸ்டாலின் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. தேவைப்பட்டால் தமிழக அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.

அதிமுக அணிகளுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

TN government will faces Trust Vote soon says Stalin

கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், தமிழகத்தில் நிலவும் ஆசாதாரண சூழ்நிலை பற்றி பேசினார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் அதிமுக மூன்று அணியாக பிரிந்துள்ளதால் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறினார்.

இதனால் தமிழக மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் பிரச்சினைகளுக்கும், மக்கள் அடைந்த பாதிப்புகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்றார்.

மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், தேவைப்பட்டால் கொண்டு வருவோம் என்றார்.

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்புமா என்பது கேள்விக்குறிதான்.

Presidential Election 2017,Puducherry CM Narayanasamy Voting-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
MK Stalin said that press person, if we demands fresh Secret Trust Vote again in Edapadi Palanisamy government.
Please Wait while comments are loading...