For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் அழைப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை அதிமுக கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவை புதிய ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் ரோசையா இன்று அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் ஆளுநரை ஜெயலலிதா சந்திக்க உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உள்ளார்.

TN governor invites Jayalalithaa to form govt

இதற்காக இன்று காலை சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ரோசையா, ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பட்டியலை அளிக்குமாறும் ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசையா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் ஆளுநர் ரோசையா ஜெயலலிதா சந்திக்க உள்ளார்.

English summary
Tamilnadu Governor has invited ADMK legilative party leader Jayalalithaa to form the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X