For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: கால்நடைத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு- டெல்லி புறப்பட்டார்

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பாலக்ருஷ்ணா ரெட்டிக்கு முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் டெல்லிக்கு வருமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது தமிழக புரட்சியாளர்களின் கோரிக்கை. காளைகளை காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதும் இவர்களின் வலியுறுத்தல்.

தமிழகத்தில் இளைஞர்களின் போராட்டம் உஷ்ணம் அதிகரிக்கவே டெல்லி சென்று பிரதமரிடம் பேசினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். பிரதமருடனான சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ள நிலையில் நல்லது நடக்கும் என முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

TN Minister rush into Delhi

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக சென்னை திரும்புவதாக திட்ட மிட்டிருந்தார் ஆனால் தனது ஊர் திரும்பும் பயணத்தை திடீரென ரத்தும்செய்தார் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடுத்து தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுனர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

இந்தநிலையில் தமிழக கால்நடை துறை அமைச்சரான பாலகிருஷ்ணா ரெட்டி யை உடனடியாக கிளம்பி டெல்லி வருமாறு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார் இதனையடுத்து அமைச்சர் டெல்லி கிளம்பி சென்றார்.

வெள்ளிக்கிழமையன்று சுற்றுசூழல் துறை அமைச்சரை சந்திக்கவும் மற்ற சட்ட நடவடிக்கைகளை அடுத்தகட்டதுக்கு எடுத்து செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யயும் உள்ளதாக கூறப்படுகிறது. அவசர சட்டம் இயற்றப்படுமா? முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் வரலாற்றில் இடம் பெறுமா? பார்க்கலாம்.

English summary
P Balakrishna Reddy Minister for Animal Husbandry rushed into Delhi. TamilNadu Chief Minister O.Panneerselvam called Balakrishna Reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X