For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுனாமி சூறையாடிய 10வது ஆண்டு... இடிந்தகரை கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி!

Google Oneindia Tamil News

நெல்லை: சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கோர சம்பவத்தை நினைவு கூறும் வகையில் கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இடிந்தகரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தம் நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

TN offers prayer for 2004 tsunami victims on 10th anniversary

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

தெற்காசியாவையே உலுக்கிய இந்த சுனாமி, தமிழகத்தையும் விட்டு வைக்காமல் கடற்கரை மாவட்டங்களான நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (26 ஆம் தேதி) 10 ஆண்டுகள் ஆகிறது.

TN offers prayer for 2004 tsunami victims on 10th anniversary

ஆனாலும் நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவம், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் அது ஆறாத வடுவாகவே உள்ளது.

இந்த கோர சம்பவத்தை நினவு கூறும்வகையில், இந்தநாளில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். குடம் குடமாய் பாலை ஊற்றி கண்ணீர் விட்டு அழுதனர்.

TN offers prayer for 2004 tsunami victims on 10th anniversary

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில், சுனாமியால் இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தம் நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் உள்ள லூர்துமாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.பங்குதந்தை தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக கடற்கரை நோக்கி மலர்கள், பால்குடத்துடன் சென்றனர். பின்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பெண்கள் கொண்டு சென்ற பால்குடம் கடலில் கலக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இடிந்தகரை உள்பட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இதுபோல தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

English summary
To mark the tenth anniversary of 2004 Tsunami disaster, people in Tamil Nadu on Friday offered prayers for the victims. Idindakarai people pay homage by placing wreaths in tsunami memorial
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X