For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது புதுஸ்ஸா இருக்கே... பாஜக மீதான குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பாணியிலேயே பதிலடி கொடுத்த தமிழிசை!

தமிழக அரசியல் தலைவர்கள் அறிக்கைகள், பேட்டிகளைத் தாண்டி அடுத்த லெவலில் டிஜிட்டல் மீடியா மூலம் தங்களுடைய கருத்துப் பரிமாற்றத்தை வெளிபடுத்தத் தொடங்கியுள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிமுகப்படுத்தியுள்ள புது ட்ரெண்ட் அரசியலுக்கு அவர் பாணியிலேயே தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதில் கொடுத்துள்ளார்.

தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் இது வரை மக்கள் பிரச்னைகளை, கண்டனங்கள், பாராட்டுகள், அறிவிப்புகள் என அனைத்தையும் தங்களது அறிக்கை வாயிலாக தெரிவித்து வந்தனர். தொலைக்காட்சி சேனல்களின் வளர்ச்சியையடுத்து பேட்டி, விவாதம் என்றும் ஊடகங்களின் அபிரிமிதமான வளர்ச்சியால் நேரலை பேட்டி என்றும் தொழில்நுட்பத்திற்கேற்ப அரசியல் தலைவர்களின் கருத்துப் பரிமாற்றமும் பரிணாம வளர்ச்சி பெற்றது.

தற்போது எல்லாவற்றிலும் இந்தியா டிஜிட்டல் மயமாகி வருவதால், தமிழக தலைவர்களும் டிஜிட்டல் மயமாகிவருகின்றனர். இதற்கு அடித்தளமிட்டவர் பிரதமர் நரேந்திர மோடி. நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமரின் அபரிமிதமான வெற்றிக்கு டிஜிட்டல் மீடியாக்களைப் பயன்படுத்தி அவர் செய்த பிரச்சாரமே காரணம் என்று சொல்லப்பட்டது. இதே பாணியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் டிஜிட்டல் மீடியாவை பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்.

புது ட்ரெண்ட் அரசியல்

புது ட்ரெண்ட் அரசியல்

ஸ்டாலினின் முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இது வரை அவரது அறிக்கைகள், நேரலை பிரச்சாரங்கள், பேட்டிகள் என அனைத்தும் பதிவிடப்பட்டிருந்தன. ஆனால் இப்போது புதுட்ரண்டாக அறிக்கையை ஸ்டாலினே வாசிக்க அதை வீடியோவாக எடுத்து ஆங்கில சப்டைட்டில்களுடன் முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

கவனத்தை திருப்பிய வீடியோ

கவனத்தை திருப்பிய வீடியோ

கடந்த வாரம் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அது தேசிய ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டது. இதே போன்று ஏப்ரல் 30ம் தேதி ஸ்டாலின் சமூக வளைதளத்தில் வருமானவரி, சிபிஐ அமலாக்கத்துறையை கையில் வைத்துக் கொண்டு தமிழக அரசின் உரிமைகளில் பாஜக தலையிடுவதாக குற்றம்சாட்டும் வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார் இதுவும் தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழிசையின் பதிலடி

தமிழிசையின் பதிலடி

இந்த நிலையில், நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் ஸ்டாலின் பாணியிலேயே சமூக வலைதளத்தில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலின் பாணியில் டிஜிட்டல் அரசியலை தமிழிசையும் இப்போது கையில் எடுத்துள்ளார்.

ராமதாஸ்- அன்புமணி

ராமதாஸ்- அன்புமணி

ஏற்கனவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் டாக்டர் அன்புமணியும் சமூக வலைதளத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவது நினைவிருக்கலாம்.

English summary
DMK executive president stalin and bjp leader tamizhisai exchanging their statements by using social medias leads to anew trend politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X