நீட் தேர்வுக்கு எதிராக இன்று முக ஸ்டாலின் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்தப் போராட்டத்தில் சேலத்தில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Today DMK's human chain protest against NEET

திமுகவின் இந்தப் போராட்டத்துக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி சேலத்தில் நடக்கும் மனித சங்கலி போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

சென்னையில், அண்ணாசாலை அண்ணா சிலையில் இருந்து தேனாம்பேட்டை அன்பகம் வரையிலும், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் இருந்து விமான நிலையம் வரைய்லும், சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகிலும் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வட சென்னையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Communist Parties protest Against NEET Exam-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Today DMK is organising a human chain protest to exempted Tamil Nadu from NEET exam.
Please Wait while comments are loading...