சசிபெருமாள் பாணியில் போராட்டத்தில் குதித்த டிராபிக் ராமசாமி.. பெரும் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சசிபெருமாள் பாணியில் தற்கொலை முயற்சி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரீஸில் உள்ள குறளகம் அருகில் உள்ள கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் காமராஜ் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிடிவாதமாக இருக்கும் டிராபிக்

பிடிவாதமாக இருக்கும் டிராபிக்

அவரை சமாதானம் படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் டிராபிக் ராமசாமி தனது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து பிடிவாதமாக இருந்தார்.

2015ல் சசிபெருமாள்

2015ல் சசிபெருமாள்

இதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டு சமூக ஆர்வலர் சசிபெருமாள் மதுவுக்கு எதிராக தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினார். கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலை செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்தார்.

மரணித்த சசிபெருமாள்

மரணித்த சசிபெருமாள்

சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கயிறுக்கட்டி சசிபெருமாளை போலீசார் கீழே இறக்கினர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சசிபெருமாள் பாணியில்..

சசிபெருமாள் பாணியில்..

ரத்த அழுத்தம் காராணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் அதேபோல் ஒரு போராட்டத்தை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Social activist traffic Ramasamy has been involved in a suicide attempt in Sasiperumal style. This is creats tension in the area.
Please Wait while comments are loading...