For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

30 கிலோ தங்கம் மாயம்….கண்காணிப்பு வளையத்திற்குள் 16 அதிகாரிகள்…

Google Oneindia Tamil News

திருச்சி: சுங்கத் துறை அலுவலத்தில் 30 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகள் 16 பேர் சி.பி.ஐ வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டள்ளனர்.

போலி சாவியைப் பயன்படுத்தி, சுங்கத்துறை அலுவலக லாக்கரில் இருந்த 30 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் திருடப்பட்டள்ளன. இந்த திருட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் நிகழ்ந்து வந்துள்ளதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Trichy customs official under scanner regard missing gold in Kgs

போலி தங்கக் கட்டிகள்

மேலும் தங்கக் கட்டிகளை திருடிய நபர்கள் அதற்கு பதிலாக போலியான தங்கக் கட்டிகளை வைத்துள்ளனர்.

அதிகாரிகளின் கில்லாடித்தனம்

இதில் மற்றொரு கில்லாடித்தனம் என்னவென்றால், அந்த போலி தங்கக் கட்டிகள் 18 கேரட் தங்கக் கட்டிகள் எனக் கூறி சுங்கத் துறை அதிகாரிகள் ஏலத்தில் விபற்பனை செய்துள்ளனர். இதனை அதிகாரிகளுக்கு தெரிந்த நபர்கள், மிக மிகக் குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர்.

10 ஆண்டுகளாக போலி கணக்கு

இதன் மூலம் சுங்கத் துறையும் வருமானம் ஈட்டியுள்ளதாக போலியாக கடந்த 10 ஆண்டுகளாக கணக்கு காட்டப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு வளையத்திற்குள் அதிகாரிகள்

இதையடுத்து சுங்கத் துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்ட 16 அதிகாரிகளை சி.பி.ஐ, கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டவந்துள்ளது.

English summary
16 officials in the rank of superintendent and inspector at the Trichy customs and excise department office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X