For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக்கடல் காற்றழுத்தம் புயலானது.... வருது வருது 'மாருதா'

வங்கக்கடலிடல் உருவான காற்றழுத்தம் புயலாக மாறியுள்ளது. அதற்கு மாருதா என பெயரிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் இன்று அதிகாலை புயலாக மாறியது. அதற்கு மாருதா என பெயரிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக பாம்பன், கடலூர் துறைமுகங்களில் இரங்ணடாம் என புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

தமிழகத்திற்கு அதிகளவு நீரை தரும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்துப் போனது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு குடிநீருக்கே அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

அதிகாலை புயலாக மாறியது

அதிகாலை புயலாக மாறியது

இந்நிலையில் அந்தமான் அருகே வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புயலாக மாறியுள்ளது.

அந்தமானுக்கு அருகே மையம்

அந்தமானுக்கு அருகே மையம்

அந்தமானுக்கு வடமேற்கே 330 கி.மீ. தொலைவில் மாருதா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு மாருதா என பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதக்கி வரும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

ஓரீரு இடங்களில் மழை

ஓரீரு இடங்களில் மழை

ஆனால் இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், ஒரீரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பர்மா அருகே கரையை கடக்கும்

பர்மா அருகே கரையை கடக்கும்

இந்த புயல் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு பகுதியில் நகர்ந்து பர்மா நோக்கி நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு

2ஆம் எண் எச்சரிக்கை கூண்டு

மாருதா புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

English summary
Tropical Cyclone Maarutha has formed in the Bay of Bengal and will bring heavy rain to portions of Myanmar late this weekend into early next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X