For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிடிவி தினகரன் வேட்புமனு ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு - டிராபிக் ராமசாமி ஹைகோர்டில் மனு

டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீட்டுள்ளார்.

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளதால் அவர் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

TTV Dhinakaran nomination RK Nagar by-poll: PIL filed in Madras HC

அவர் சிங்கப்பூர் பிரஜை என்ற சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவரது வேட்புமனுவை ஏற்க திமுக வேட்பாளர் உள்பட பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீட்டுள்ளார்.

டிடிவி தினகரனை சுயேட்சை வேட்பாளராக கருத வேண்டும் என்றும், தொகுதி வாக்காளர்கள் 10 பேரிடம் கையெழுத்து வாங்காததால் அவரது மனுவை ஏற்றது தவறு என ராமசாமி சுட்டிக்காட்டியுள்ளார். டிராபிக் ராமசாமி புகார் குறித்து பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

English summary
Traffic Ramasamy petition was filed in the Madras high court to restrain the Election Commission of India from accepting the candidature of TTV Dhinakaran for the RK Nagar by-poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X