ஜெ.வை விட பெஸ்ட் தினகரன்தான்.. அவர் முதல்வராவதே எங்கள் கனவு.. நாஞ்சில் சம்பத் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும் என்பதே எங்களின் கனவு என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஜனநாயக தரம் உள்ள தலைவர் டிடிவி தினகரன் எனவே, ஆட்சியும், கட்சியும் தினகரன் கையில்தான் இருக்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவை சிறந்த தலைவர் டிடிவி தினகரன் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் நாஞ்சில் சம்பத்.

நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

டிடிவி தினகரனை அவரது ஆதரவாளர்கள் தினசரியும் சந்தித்து பேசி வருகின்றனர். பெசன்ட்நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தினகரன் கூட்டத்துக்கு மாவட்ட அமைச்சர்களுக்கு அழைப்பு விடுப்போம் என்றார்.

கட்சியும் ஆட்சியும்

கட்சியும் ஆட்சியும்

ஆட்சியும் கட்சியும் எதிர்காலத்தில் தினகரன் கையில் இருக்க வேண்டும் என்றே விரும்புவதாக கூறிய நாஞ்சில் சம்பத், தமிழகத்துக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் தினகரன் எனும் தலைவர் கிடைத்திருப்பதாக கூறினார்.

தினகரன் பற்றி கனவு

தினகரன் பற்றி கனவு

ஜெயலலிதாவைவிட ஜனநாயக பண்பு அதிகம் கொண்ட தலைவர். டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும் என்பதே எங்களின் கனவு. திராவிட இயக்கத்துக்கான அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் சுயநலவாதி

ஓபிஎஸ் சுயநலவாதி

அதிமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று ஓபிஎஸ்ஐத்தான் முதல்வர் கூறியுள்ளார். சொந்த கிணற்றிலேயே தண்ணீர் கொடுக்காதவர் பன்னீர்செல்வம், அவர் சுயநலமானவர்.

தாமரை எப்படி மலரும்

தாமரை எப்படி மலரும்

பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வருகிறார்களே என்று கேட்டதற்கு தமிழகத்தில் தண்ணீரே இல்லை பிறகு தாமரை எப்படி மலரும் என்று நாஞ்சில் சம்பத் கேட்டார்.

Nanjil Sampath Tease OPS-oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Nanjil Sampath has said that TTV Dinakaran is better than late Jayalalitha and he has asked the cadres to make Dinakaran as the next CM
Please Wait while comments are loading...