அதாவது வைகைச் செல்வன் என்ன சொல்றாருன்னா.. தினகரன் "பாகுபலி" ஆயிட்டாருன்னு சொல்றாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி.தினகரன் நான் அதிமுகவில் இருந்த ஏற்கனவே ஒதுங்கிவிட்டேன் என்று கூறியதன் மூலம் டிடிவி.தினகரன் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார் என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் உயர்ந்த நற்பண்பு இதன் மூலம் வெளிப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

சசிகலா குடும்பத்தினரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அதிமுக அம்மா அணியின் அமைச்சர்கள் நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர். டிடிவி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரால் அதிமுகவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்,

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி.தினகரன் அதிமுகவில் இருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன் அதாவது செவ்வாய்க்கிழமை இரவே ஒதுங்கிவிட்டேன் என அவர் கூறினார். மேலும் அமைச்சர்கள் என்னிடம் கூறியிருந்தால் நானே அதிமுகவில் இருந்து விலகியிருப்பேன் என்றும் கூறினார்.

நன்றி தெரிவித்த தினகரன்

கட்சியில் பிளவு ஏற்பட தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும், நான் விலகினால் கட்சிக்கு நல்லது நடக்கும் என்றால் நடக்கட்டும் என்றும் அவர் கூறினார். மேலும் தனக்கு ஆதரவளித்த அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் நன்றியும் தெரிவித்தார்.

உயர்ந்து நிற்கிறார்

அவரது இந்த முதிர்ச்சியான பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக அம்மா அணியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் ஏற்கனவே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என கூறியதன் மூலம் மக்கள் மனதில் டிடிவி.தினகரன் உயர்ந்து நிற்கிறார் என்றார்.

மக்கள் மனதில் இருப்பார்

மேலும் அமைச்சர்கள் என்னிடம் கூறியிருந்தால் நானே விலகியிருப்பேன் என்று அவர் கூறியிருப்பதன் மூலம் அவரது நற்பண்பு வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கட்சி நலனுக்காக டிடிவி தினகரன் ஒதுங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் என்றும் மக்க்ள மனதில் இருப்பார் என்றும் வைகைச்செல்வன் கூறினார்.

அதிமுகவில் வெற்றிடம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும் சசிகலாவின் சிறைவாசத்துக்குப் பிறகும் அதிமுகவில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது சசிகலாவின் குடும்பத்தினர் இல்லாமல் அதிமுகவில் ஒரு வெற்றிடம் ஏற்படும் என்றும் வைகைச்செல்வன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran stands in public hearts says ADMK Amma party spokes person Vaigaiselvan. TTV Dinakaran will be there in public hearts forever Vaigaiselvan said.
Please Wait while comments are loading...