For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிவிட்டரில் நன்றி சொல்லி விட்டு அதிமுகவை விட்டு ஓடினார் தினகரன்!

அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரன் அதிமுகவை விட்டு முழுவதுமாக ஒதுங்கியுள்ளார். ஒற்றுமையாக இருங்கள் என்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் ஓ.பன்னீர் செல்வம். கட்சி இரண்டாக பிளவு பட்டது. இந்த சூழ்நிலையில் சசிகலாவும் சிறைக்கு செல்லவே அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் டிடிவி தினகரன்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். ஆனால் டிடிவி தினகரனின் தலையீடு அதிகம் இருக்கவே, கொங்கு மண்டல அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதன் உச்சக்கட்டமாக அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை விலக்கி வைப்பதாக கூறினர். இதற்கு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று கூறிய அவர் இதுநாள் வரை தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

அவரது டுவிட்டுகளை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நான் காரணமாக இருக்க மாட்டேன்

கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு நான் என்றும் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

அச்சம் கூடாது

ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்க சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது.

ஒற்றுமையாக இருங்கள்

எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்த காரணத்தை கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்.

மனமார்ந்த நன்றி

எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். இதன் மூலம் தான் அதிமுகவில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதை உணர்த்தியுள்ளார் தினகரன்.

English summary
TTV Dinakaran on his twitter page, Extend my heartfelt gratitude to all my party office-bearers and cadre who’ve extended their full fledged support to me till now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X