For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரி சென்னை ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் போரின் போதும் பின்னரும் சிங்கள அரசால் திட்டமிட்டு காணாமல் போகச் செய்யப்பட்டோரை கண்டுபிடிகக்க் கோரி சென்னையில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

TVK demands probe into missing Tamils in Srilanka

ஐக்கிய நாடுகள் அவையால் ஆகஸ்ட் 30-ந் தேதியன்று சர்வதேச காணாமல் போனோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இலங்கையில் போரின் போதும் அதற்கு பின்னரும் காணாமல் அடிக்கப்பட்டோரை மீட்கக் கோரி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

TVK demands probe into missing Tamils in Srilanka

இதில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையத்தின் பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TVK demands probe into missing Tamils in Srilanka

முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா. அலுவலகத்தில் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது.

English summary
TVK has demanded to probe into missinge Tamils in Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X