For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீயா பரவும் திராவிட நாடு கோஷம்- மோடிக்கு நன்றி சொல்லும் நெட்டிசன்ஸ்!

மாட்டிறைச்சி தடையால் திராவிடநாடு என்ற கோஷம் மீண்டு விவாதத்திற்கு பொருளாக மாறியிருக்கிறது. அதனை மீண்டும் பேசு பொருளாக மாற்றி இருக்கும் மோடிக்கு குவிக்கிறது பாராட்டு…

Google Oneindia Tamil News

சென்னை: மாட்டிறைச்சிக்கு தடை என சொன்ன உடன் உண்மையில் பண்பாட்டுப் போர் தொடங்கிவிட்டதுதான். தென் தமிழகத்தில் திராவிட நாடு என்ற சொல் டிரெண்டிங்காக மாறியிருக்கிறது.

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவைக் கண்டித்து கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு கடுமையாக பாஜகவை எதிர்த்து வருகிறது. அங்கு தான் திராவிட நாடு என்ற கோரிக்கை அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து திராவிடம் குறித்த கருத்தாக்கங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசும் பொருளாக மாறியிருப்பதோடு, முக்கிய சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நினைவூட்டும் கேரளம்

மாடு விற்பனைத் தடைகளை மத்திய அரசு கொண்டு வந்ததன் விளைவு, தமிழகம் மறந்த திராவிட நாட்டைக் கேரளம் இப்போது நினைவுபடுத்துகின்றது என்று திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுபவீ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடையாளங்கள் அழிக்க விடமாட்டோம்

முட்டாள் தனமான கருத்துக்களை தங்கள் மீது திணித்து வரும் மோடி, எங்களது அடையாளங்களையும் உரிமையையும் அழிக்க விட மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மோடியின் பவர்

தமிழகம் மறந்து போன திராவிட நாடு கோரிக்கையை மீண்டும் மைய நீரோட்டத்திற்கு கொண்டு வந்த மோடி சந்தேகத்திற்கிடமின்றி பவரான மனிதர்தான் என்று சமூக செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 ரூம் போட்டு யோசிக்கும் பாஜக

ரூம் போட்டு யோசிக்கும் பாஜக

பிரதமர் மோடி எது செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தமிழகத்தில் கண்டிப்பாய் இருக்கும். ஆனால் மாட்டிறைச்சியில் கை வைத்த உடன் கேரளா, தமிழகம், கர்நாடகா என தென் தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அதிகரித்துவிட்டது. மோடி என்ன சொன்னாலும் வாய் பொத்தி ஏற்றுக் கொள்ளும் வட மாநிலங்கள் போல் தென் தமிழகம் மட்டும் ஏன் இல்லை என பாஜகவினர் ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம்.

English summary
There are some twitters on DravidaNadu supports here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X