For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயணி அணிந்திருக்கும் ட்ரெஸ்சை பார்த்து கட்டணம் வசூலிக்கிறார்களா சென்னை 'உபர்' டிரைவர்கள்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஆட்டோக்களை போல ஆட்களை பார்த்து அடாவடி கட்டணம் வாங்க ஆரம்பித்துள்ளது சென்னை, உபர் நிறுவன கால் டாக்சிகள் என்று நெட்டிசன் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆட்டோ பயணம் என்பது உலக அளவில் சர்ச்சைக்குறிய விஷயமாகவே பேசப்படுகிறது. சென்னைக்கு புதிது என்றால் போதும், இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயிப்பது, ஊரையே சுற்றிக்காட்டி காசு வசூலிப்பது, மீட்டரில் சூடு வைத்து அதிக பணம் கறப்பது, மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது என ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.

போலீசாரிடம் புகார் கொடுக்கலாம் என்றால் பல ஆட்டோக்கள் போலீசாரின் பினாமி வாகனங்கள்தான் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

கால் டாக்சிகள் வருகை

கால் டாக்சிகள் வருகை

இந்த நிலையில்தான் ஓலா, பாஸ்ட்டிராக், உபர் போன்ற கால்டாக்சிகள், ஆட்டோக்களின் அடாவடியில் இருந்து மக்களை காக்கும் தேவதூதர்களாக களமிறங்கின.

ஐடி ஊழியரின் புகார்

ஐடி ஊழியரின் புகார்

இந்த நிலையில், கால் டாக்சி மீதும் ஒரு புகார் இப்போது டிவிட்டரில் வைரலாக சுற்றி வருகிறது. பெங்களூரை சேர்ந்த சிவநாராயண் என்ற ஐடி துறை ஊழியர் இதுகுறித்து டிவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஆளை பார்க்கிறார்கள்

ஆளை பார்க்கிறார்கள்

அதில், உபர் கால் டாக்சி ஆள் பார்த்து பணம் வசூலிப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். செல்போன் ஆப் மூலம் கால் டாக்சியை புக் செய்து அதில் காண்பிக்கும் கட்டணத்தை செலுத்துவதுதான் உபர் ஸ்டைல். ஆனால் இவரோ ஆள் பார்த்து காசு வசூலிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துக்களை கூறுங்களேன்

ஏகப்பட்ட ஆய்வுகளுக்கு பிறகு, உபரும், சென்னை ஆட்டோ டிரைவர்களை போன்ற கட்டண வியூகத்தை கையில் எடுத்துள்ளன. உங்கள் ஆடையை வைத்துதான் கட்டணத்தை நிர்ணயிக்கின்றன என அவர் டிவிட் செய்துள்ளார். பல நெட்டிசன்களுக்கும் இதில் உடன்பாடு உள்ளது போல. சுமார் 250 பேர் அந்த டிவிட்டை ரீடிவிட் செய்துள்ளனர். சிலர் அப்படியில்லை என்று மறுமொழியும் கூறியுள்ளனர். உங்களுக்கும் அப்படி ஏதேனும் அனுபவம் இருப்பினும் இங்கு கருத்துக்களை பகிரலாம்.

English summary
"After much R&D, Uber has settled on a pricing strategy similar to Chennai auto drivers. They look at your clothes n quote you a fare" says a Netizen in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X