நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் முத்த மழை பொழிந்த காமூகன்

சென்னை: திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் உள்ள நர்சுகள் அறைக்குள் புகுந்த முகமூடி ஆசாமி அங்கிருந்த சுடிதார்களை எடுத்து வந்து அதன் மேல் படுத்து உருண்டு முத்த மழை பொழிந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவனையின் ஒரு கட்டிடத்தில் நர்சுகளுக்கான ஓய்வறை தனியாக உள்ளது. இந்த அறையில் நர்சுகள், தாங்கள் அணிந்து வரும் சுடிதார் மற்றும் சேலைகளை மாற்றி விட்டு, சீருடைகளை அணிந்து பணிக்கு செல்வது வழக்கம். பணி முடிந்து செல்லும் போது வழக்கமான ஆடைகளை அணிந்து செல்வர்.

unidentifying person giving kisses to nurse dress

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மருத்துவமனைக்குள் முகமூடி அணிந்த இளைஞர் ஒருவர் நுழைந்தார். பின்னர், நர்சுகளுக்கான ஓய்வறைக்குள் சென்ற அவர், அங்கு ஏற்கனவே நர்சுகள் கழற்றி வைத்திருந்த சுடிதார்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றார். அங்கு சுடிதார்களை கீழே விரித்து அதற்கு மேல் 'ஹாயாக' படுத்து உருண்டு புரண்டார்.

பின்னர் ஒவ்வொரு சுடிதாராக எடுத்து முத்தமழையும் பொழிந்தார். இதை அங்கிருந்த ஒரு நோயாளி, எதேச்சையாக பார்த்து விட்டார். 'நீங்கள் யார்' என்று கேட்டுள்ளார். சத்தம் கேட்டு மற்ற நோயாளிகள் அங்கு வந்தனர். அதற்குள் முகமூடி இளைஞர் தப்பி விட்டார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. மேலும், மருத்துவமனைக்குள் கொள்ளையடிக்க வந்த ஆசாமியா என்ற பீதியில் நோயாளிகள், ஊழியர்கள் யாரும் தூங்கவில்லை.

இதையடுத்து நேற்று திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் நோயாளிகள் கூறிய சம்பவம் பற்றி விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் முகமூடி ஆசாமியின் செயல்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த முகமூடி ஆசாமி யார், எதற்காக உள்ளே நுழைந்தார், சைக்கோ ஆசாமியா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
unidentifying person enter the government hospital and behave badly by giving kisses nurse dress
Please Wait while comments are loading...

Videos