வடபழனி புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.. பொதுமக்களே திறந்து வைத்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, வடபழனியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. அரசு திறக்காததால் பொதுமக்களே பாலத்தை திறந்து வைத்தனர்.

சென்னை வடபழனி சிவன் கோவில் அருகில் தொடங்கும் புதிய மேம்பாலப் பணிகள் முடிந்த போதும் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படாமல் இருந்தது. சென்னை வடபழனி 100 அடி சாலையில் ரூ.56 கோடி செலவில் மேம்பாலம் கட்ட கடந்த 2011ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் பணி மேம்பால பணி நடந்ததால் வடபழனி சிக்னல் அருகே மேம்பாலம் கட்டும் பணி தாமதம் ஏற்பட்டது.

Vadapalani flyover opened by public

பின்னர் மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த இடத்தில் அமைந்துள்ள மேம்பாலம் திறந்துவிடப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வாகன ஓட்டிகளே பேரிகார்டை அகற்றி பாலத்தை பயன்படுத்த தொடங்கினர். இதையடுத்து மீண்டும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு போலீசார் பேரிகார்டை அமைத்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பேரிகார்டை அகற்றி பொதுமக்களே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். திறப்பு விழா நிகழ்ச்சி எதுவும் நடைபெறாமல் இன்று காலை முதல் பொதுமக்கள் அந்த மேம்பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
chennai Vadapalani junctions bridge opened by public on today
Please Wait while comments are loading...