For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவாரூர்: மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளராக வைகோ நியமனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவாரூர்: மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வைகோவை நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூரில் நடைபெற்ற மக்கள் நல கூட்டியக்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற்றுத்தரகோரியும், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த கோரியும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷெல்வாயு எடுக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை 6 மணிக்கு பொதுகூட்டம் நடைபெற உள்ளது.

Vaiko appointed as the co-ordinator of People’s welfare front

இந்த கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், எம்.எல்.ஏக்கள் பாலகிருஷ்ணன், உலகநாதன், ஆறுமுகம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

Vaiko appointed as the co-ordinator of People’s welfare front

இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

முன்னதாக மக்கள் நல கூட்டியக்கத்தினர் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் இன்று காலையில் நடைபெற்றது. இதில் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு மாநில செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மக்கள் நல கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக வைகோவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
MDMK Chief Vaiko has been selected as the co ordinator of Makkal Nalan Kaakkum Iyakkam at Thiruvarur meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X