கர்நாடகத்தின் போக்கு தொடர்ந்தால் தேசிய ஒற்றுமை சீர்குலையும்.. வைகோ எச்சரிக்கை

மதுரை: காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என்ற கர்நாடக அரசின் நிலைப்பாட்டிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் 21ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை 6000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடக அரசின் அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Vaiko condemns Karnataka government

கர்நாடக அரசின் இந்த முடிவிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் வைகோ, இதே நிலை நீடித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு சிதைந்து விடும் என்றும் காவிரி நீர் இல்லை என்றால் தமிழகம் பாலை வனமாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், காவிரி பிரச்சனையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டிய வைகோ, காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Vaiko condemned Karnataka government standing on Cauvery water release to Tamil Nadu.
Please Wait while comments are loading...

Videos