For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாம் வீட்டில் மிஷன் ஆப் லைஃப் கண்காட்சி... கண்கலங்கிய வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரம் இல்லத்துக்கு சென்ற வைகோ, கலாமின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அப்துல் கலாம் இல்லத்தில் உள்ள மிஷன் ஆப் லைப் கண்காட்சியை ஒரு மணி நேரம் பார்வையிட்டார்.

Vaiko visits House of Kalam

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று இரவு ராமேசுவரம் வந்தார். அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்ற வைகோ, கலாமின் அண்ணன், பேரன் சேக் சலீம், அண்ணன் மகன் ஜெயினுல் ஆப்தீன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அப்துல் கலாம் இல்லத்தில் உள்ள "மிஷன் ஆப் லைப்" கண்காட்சியை ஒரு மணி நேரம் பார்வையிட்டார். அப்போது, மாவட்டச் செயலாளர்கள் ராஜா. மு.பூமிநாதன், ப.சரவணன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Vaiko visits House of Kalam

தேநீர் அருந்திய வைகோ

இன்று ராமேசுவரத்தில் அப்துல் கலாமின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அங்கு தங்கியுள்ள வைகோ, காலை நடை பயிற்சி சென்றுவிட்டு வரும் வழியில், சந்திரசேகர் என்ற கூலித்தொழி வைகோ அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, தனது இல்லத்துக்கு வந்து தேநீர் அருந்த வேண்டும் என்றார். அவரது அன்பான கோரிக்கையை ஏற்று அவரது இல்லம் சென்று வைகோ தேநீர் அருந்தினார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

English summary
MDMK general secretary Vaiko visited Dr Abdul Kalam's house in Rameswaram yesterday and spent an hour there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X