For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஞானதேசிகன் நியாயமானவர் என்றால் சத்தியமூர்த்தி, கக்கன் படத்தை போட்டிருக்கலாமே.. பேஸ்புக்கில் ஒரு சூடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் நியாயமானவராக இருந்திருந்தால் உறுப்பினர் அட்டையில் தீரர் சத்தியமூர்த்தி, கக்கன் ஆகியோரது படத்தையெல்லாம் போட்டிருக்கலாமே. ஏன் அதை அவர் செய்யவில்லை என்று வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர்.

கட்சியில் மரியாதை இல்லை, தலைமை மதிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலகியுள்ளார்.

மேலும் கட்சித் தலைமை மீது சரமாரியாக புகார்களையும் அவர் கூறியுள்ளார். அதற்கு கட்சி மேலிடம் மறுப்பும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக்கில் வாசன் கோஷ்டிக்கு மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஆதரவாளர்கள் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

யாரையும் நம்பி காங்கிரஸ் இல்லை

யாரையும் நம்பி காங்கிரஸ் இல்லை

தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாள்சாமி கதிர்வேல் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஞானதேசிகனை விமர்சித்து பதவிட்டுள்ளார். அதில், எனக்கு தெரிந்து காங்கிரஸ் கட்சி யாரையும் நம்பி என்றுமே இல்லை. இந்த கட்சியில் இருந்து யார் யாரோ போனார்கள், வந்தார்கள். ஆனால் கட்சி அழியவில்லை...

உதார் விடக் கூடாது

உதார் விடக் கூடாது

சும்மா உதார் விடுபவர்கள் கட்சி தலைமையை குறை கூறுபவர்கள் எல்லாம் அவர்கள் அடைந்த பதவிகள் யாரால் வந்தது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்...

ராகுல் மட்டுமே

ராகுல் மட்டுமே

என்றுமே இனி காங்கிரஸ் என்றால் ராகுல் தான்....

நியாயமானவராக இருந்திருந்தால்

நியாயமானவராக இருந்திருந்தால்

ஞானதேசிகன் பதவி ஏற்கும் முன் அட்டை மற்றும் விளம்பரங்களில் யார் படங்கள் இருந்தது. இவர் வந்த பின் யார் படங்கள் இருந்தது என எல்லோரும் அறிவர். ( நியாயமானவர் என்றால் ஏன் ஐயா சத்தியமுர்த்தி, கக்கன் படம் எல்லாம் போடலாமே...)

சுத்த பேத்தல்

சுத்த பேத்தல்

கோஷ்டி அரசியல் செய்தவர் இவர். தலைமை தன் கருத்தை மதிக்கவில்லைஸ மாநிலத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை என கூறுவது சுத்த பேத்தல்... நான் என்றும் கட்சி தலைமையை விமர்சிக்க மாட்டேன், கோஷ்டி தலைமையை

அரசியலை விமர்சிப்பேன்...

அரசியலை விமர்சிப்பேன்...

காமராஜருக்கு மாற்றுக் கருத்தே கிடையாது

தமிழக காங்கிரஸ் உறுப்பினர் அட்டையில் அரசியல் - அய்யா காமராசர் படம் இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது...

வேறு படம் வேண்டும் என்றால்

வேறு படம் வேண்டும் என்றால்

அதே நேரத்தில் வேறு சிலர் படம் இருக்க வேண்டும் என முடிவு எடுத்தால், திரு வாழப்பாடி ராம்முர்த்தி படம் சேர்க்க பட வேண்டும் ... அவர் இந்த இயக்கதிற்கு ஆற்றிய பணியை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது...

இல்லையா பழைய முறையே தொடரட்டும்

இல்லையா பழைய முறையே தொடரட்டும்

இல்லையேல் அய்யா காமராசர் , ராகுல் மற்றும் சோனியா படம் இருக்கும் உறுப்பினர் அட்டையே சிறந்தது. வேறு யார் படமும் இருக்காது ... ( இதுவே பழைய முறை சிறந்த முறை)..

அடக் கொடுமையே

அடக் கொடுமையே

இன்று ஒரு காங் கட்சி நண்பர் தன் தலைவருக்கு தலைமை சரியான அங்கீகாரம் கொடுக்காவிட்டால் தனி கட்சி அவதாரம் எடுப்பாராம்.... self respect மிக முக்கியமாம்......பின் ஆட்சியே அவர் கையில் தானாம் (இவரை நம்பி தான் தமிழக அரசியல் சுத்துமாம் -அட கொடுமையே) அவர் இளம் வயது தலைவராம். எணக்கு குபுக்கு னு சிரிப்பு தான் வந்தது. பதவியில் உள்ள போது கட்சிகாரனுக்கு எந்த உதவியுமே செய்யாமல் இப்போ இந்த நினைப்பை என்ன சொல்ல...

தைரியம் வேண்டும்

தைரியம் வேண்டும்

தணி கட்சிக்கு எல்லாம் னதரியம் வேண்டும் யா...

கார்த்திக், அன்புமணிக்கு வாழ்த்துகள்

கார்த்திக், அன்புமணிக்கு வாழ்த்துகள்

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது என்ன அவ்வளவு சுளுவா. அப்படி என்றால் வயது குறைவான அன்புமனி, நவரச நாயகன் கார்த்திக், வேல்முருகன் போன்றோர்க்கும் என் வாழ்த்துக்கள்...

அடுத்து யார்

அடுத்து யார்

ஞானதேசிகன் முடிவு நல்ல முடிவு ...அடுத்தது யார் my guess Dr chellakumar.... என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Late Congress leader Vazhapadi Ramamamurthy supporters are slamming resinged TNCC president Gnanadesikan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X