For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் புறக்கணிப்பு- திருமா 'முதல்' அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே. நகர் (ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அண்ணா தி.மு.க.வின் வெற்றிவேல். இவர் அண்மையில் திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்பட்டு வருகிறது. இத்தொகுதிக்கு ஜூன் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

VCK to boycott RK Nagar By-election

இதற்காக ஜூன் 3-ந் தேதியன்று வேட்பு மனுக்கள் தாக்கல் தொடங்குகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இதனைத் தெரிவித்தார்.

திருமாவளவனின் அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Viduthalai Chiruthaikal Katchi (VCK), former ally of the DMK, has decided to boycott the by-election to the Chennai RK Nagar Assembly constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X