For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாது: திருமாவளவன்

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொண்டாடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் உயிரிழப்பையொட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பருவமழைகள் பொய்த்துப்போனதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Viduthalai siruthaigal party will not celebrate Pongal festival : Thirumavalavan

கடன்வாங்கி சாகுபடி செய்த விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்ததால் தற்கொலை செய்த வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க அரசும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் உயிரிழப்பையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு எடுத்திருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
Viduthalai siruthaigal party leader Thirumavalavan says that his party will not celebrate Pongal festival. Viduthalai siruthaigal party took this decision due to farmers death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X