For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயதாரணி தலைமையில் 5 காங். எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவல்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: விஜயதாரணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது அப்பட்டமான வதந்தி என விஜயதாரணி மறுத்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி அதிரடியாக நீக்கப்பட்டார். அப்போது திடீரென ஜெயலலிதாவை அவர் சந்திக்க, அதிமுகவுக்கு தாவப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.

Vijayadharani lead 5 Mlas to join ADMK?

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர். இதில் விஜயதாரணியும் வசந்தகுமாரும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போராடி வருகின்றனர்.

இதனிடையே திடீரென விஜயதாரணி தலைமையில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு தாவப் போவதாக தகவல்கள் பரவ பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்த விஜயதாரணி, தாம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதை தடுக்கும் வகையில்தான் இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார்.

இப்படியான வதந்தியை பரப்புகிறவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பர் என்றும் விஜயதாரணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Congress MLA Vijayadharani has denied the rumors that she and 5 congress MLAs will join ADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X