For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறும் 10% மார்க் வாங்கி பெயில் ஆன விஜயகாந்த்.. ஜூ.வி. சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் செயல்படு படுமோசமானது என்று ஜூனியர் விகடன் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர். வெறும் 10% பேர் மட்டும்தான் சூப்பர் என பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஜூனியர் விகடன் வாரம் இரு முறை ஏடு சட்டசபை தேர்தலை முன்வைத்து கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த இதழில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து கணிப்பு வெளியிட்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் ஜெயலலிதா அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்த வாரம் தே.மு.தி.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் செயல்பாடு குறித்து சர்வே நடத்தி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16,846 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

விஜயகாந்த் படுமோசம்

விஜயகாந்த் படுமோசம்

இதில் விஜயகாந்தின் செயல்பாடு படுமோசம் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சுமார் என 28.37%; மோசம் என 30.41%; மிக மோசம் என 30.49% என சுமார் 90% பேர் விஜயகாந்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

வெறும் 10% பேர்தான் ஆதரவு

வெறும் 10% பேர்தான் ஆதரவு

கருத்து கணிப்பு நடத்தப்பட்ட 16,846 பேரில் 1,808 பேர் மட்டுமே விஜயகாந்த் செயல்பாடு சூப்பர் என கூறியுள்ளனர். அதாவது 100க்கு 10% பேர் தான் விஜயகாந்தின் செயல்பாட்டை பாராட்டியுள்ளனர். அந்த அளவுக்கு விஜயகாந்தின் நடவடிக்கைகள் படுமோசமாக அமைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது இந்த சர்வே.

மதுரையில் உச்சகட்ட வெறுப்பு

மதுரையில் உச்சகட்ட வெறுப்பு

விஜயகாந்த் செயல்பாடு சூப்பர் என அதிகம் பேர் சொல்லியிருப்பது சென்னை மண்டலத்தில் மட்டும்தான் (596 பேர்) அவரது நடவடிக்கைகள் படுமோசம், மிக மோசம் என ஒதுக்கித் தள்ளியிருப்பது அவரது சொந்த மண்ணான மதுரை மண்டலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கு விஜயகாந்தின் நடவடிக்கை மோசம் என 1802 பேரும் மிகமோசம் என 1832 பேரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அடுத்ததாக சென்னை மண்டலத்தில் விஜயகாந்த் செயல்பாடு மோசம் என 1,550 பேரும், மிக மோசம் என 1,649 பேரும் கூறியுள்ளனர்.

மல்லு கட்டும் கட்சிகள்

மல்லு கட்டும் கட்சிகள்

இப்படி சுமார் 90% பேரிடம் அதிருப்தியை பெற்றிருக்கும் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கத்தான் பெரும்பாலான கட்சிகள் மல்லு கட்டுகின்றன. விஜயகாந்தின் கட்சி தொடங்கிய போது இருந்த வாக்கு சதவீதம் சரிபாதியாக சரிந்துள்ளதையோ அவருக்கு கடந்த சட்டசபை தேர்தலிலும் லோக்சபா தேர்தலிலும் கிடைத்த வாக்கு சதவீதம் என்பது கூட்டணி கட்சிகளின் பலத்தோடு கிடைத்தது என்பதையோ எளிதாக புறந்தள்ளிவிட்டு அவருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று போராடுகின்றன அரசியல் கட்சிகள்.

மாயமானாக காட்சி தரும் உண்மை பலம் எதுவென்பதை ஜூனியர் விகடனின் இந்த சர்வே பட்டவர்த்தனமாக போட்டுடைத்துவிட்டது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இனியேனும் அரசியல் கட்சிகள் விழித்துக் கொள்ளுமா என்பத்

English summary
According to Junior Vikatan Survey DMDK leader Vijayakanth got 10% support from voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X