ஜெ., விரைவில் குணமடைந்து பணிகளை தொடர விஜயகாந்த், ராமதாஸ் வாழ்த்து

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணிகளை தொடர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர்கள் கமல், விஷால் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

vijayakanth and mdmk chief vaiko have wished CM Jayalalitha

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் விரைவில் குணமடைந்து, தங்கள் பணிகளை மீண்டும் தொடர இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இதேபோல் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் முழு உடல் நலம் பெற்று அரசு, அரசியல் பணிகளை தொடர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Dmdk chief vijayakanth and pmk founder Dr.Ramadoss wished speedy recovery to Jayalalithaa
Please Wait while comments are loading...

Videos