For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

20 தமிழர் படுகொலை.... நாடே கொந்தளிக்க.... ரொம்ப..........லேட்டாக வாய்திறந்த விஜயகாந்த்!

சென்னை: ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பல மணிநேரம் கழித்து சடங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்ட ஒரே ஒரு தமிழக அரசியல் கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த்..

திருப்பதி அருகே இன்று அதிகாலை ஆந்திரா போலீசாரால் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடே கொந்தளித்துள்ளது.

Vijayakanths long silence on Tamils Killing

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது தலைமையில் நெய்வேலியில் போராட்டம் நடத்தியிருக்கிறார். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் அவரது கட்சியினர் ஆந்திர பேருந்துகளை சிறைபிடித்தும் சந்திரபாபு நாயுடு கொடும்பாவி எரித்தும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதேபோல் தமிழர் முன்னேற்றப் படை, தமிழக முன்னேற்ற கழகம் போன்ற சிறிய இயக்கங்கள் கூட ஆந்திரா பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தி எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தமிழக ஊடகங்கள் அனைத்திலும் இதுவே பிரதான செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது..

ஆனால் இந்த ரணகளம் குறித்து எந்த கருத்துமே தெரிவிக்காமல் பகல் முழுவதும் அமைதி காத்த தமிழகத்தின் ஒரே அரசியல் கட்சித் தலைவர் விஜயகாந்த்...

காலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு அத்தனை தலைவர்களும் பதறிப் போய் அறிக்கை கொடுத்தால் இந்த "மக்கழே!" தலைவருக்கு என்ன "மயக்கமோ" மாலைதான் விடிந்தது போல..

மாலையில்தான் கண்டன அறிக்கையே கொடுக்கிறார்... இதில் இவருக்கு தமிழகத்தின் வருங்கால முதல்வரே என்கிற கனவு வேற...

நல்லாவே வெளங்கிடும் 'கேப்டன்' கட்சி....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X