For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரச்னையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நான் வரலை... கதிராமங்கலத்தில் கர்ஜித்த விஜயகாந்த்

பிரச்னையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக கதிராமங்கலத்திற்கு தாம் வரவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: மக்களுக்கே தெரியாமல் திட்டத்தை செயல்படுத்துகிறார் என்று கதிராமங்கலம் போராட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

பிரச்னையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக கதிராமங்கலத்திற்கு நான் வரவில்லை என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Vijayakanth slam central government on ONGC Kathiramangalam project

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் நேரில் சென்று ஆதவளித்தார்.

கூட்டத்தில் பேசிய பிரேமலதா, மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்வாக பதியவைக்கவே போராட்டம் நடத்துவதாகவும், மக்களின் ஆதரவு இல்லையெனில் திட்டத்தை தூக்கியெறிய வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் மக்கள் வாழாத இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதே போல இங்கேயும் திட்டங்களை செயல்படுத்தலாம்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியே ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் வாங்கியும் வரிகளை செலுத்தி வலியுடன் மக்கள் வாழ்ந்து வருவதாக பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், கதிராமங்கலம் போராட்டத்திற்கு தேமுதிக துணை நிற்கும் என்று கூறினார்.
கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரச்னையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக கதிராமங்கலத்திற்கு தாம் வரவில்லை என்றும் விஜயகாந்த் கூறினார்.

கதிராமங்கலத்தில் மக்களுக்கு தெரியாமல் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் விஜயகாந்த் கூறினார். ஒஎன்ஜிசி கதிராமங்கலத்தை விட்டு ஓடும்வரை ஓயப்போவதில்லை என்றும் விஜயகாந்த் கூறினார்.

English summary
Vijayakanth protest against an ONGC pipe at Kathiramangalam near Thanjavur turned Vijayakanth demand immediate release of arrested Kathiramangalam protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X