ரஜினி காங்கிரசில் சேர்ந்து அகில இந்திய அளவில் வழி நடத்த வேண்டும்: விஜயதாரணி பகிரங்க அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியில் நடிகர் ரஜினிகாந்த் இணைய வேண்டும் என்று அக்கட்சி எம்.எல்.ஏவும், சட்டசபை கொறடாவுமான விஜயதாரணி பேட்டியளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2 நாட்களாக சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். நேற்று நிகழ்ச்சி தொடங்கியபோது அரசியல் ரீதியாக அவர் சில கருத்துக்களை எடுத்து வைத்தார்.

இந்த பேச்சுக்கு பல்வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு வருகிரது. ரஜினி பாஜகவுக்கு ஆதரவளிப்பார் என்றும், தனிக்கட்சி தொடங்குவார் என்றும், எப்போதும் போல பட ரிலீசுக்கு முந்தைய ஸ்டன்ட் எனவும் பல வகைகளில் அந்த பேச்சு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

மத்திய அரசு

இந்த நிலையில், விஜயதாரணி இன்று கூறியதாவது: இந்தியாவில் யார் மத்திய அரசிற்கு எதிராக குரல் கொடுத்தாலோ , எழுந்தினாலோ, செயல்பட்டாலோ அவர்கள் மீது வருமானவரிதுறை , சி.பி.ஐ ரைடுகளை நடத்தி அச்சுறுத்தலையும் அழுத்தத்தையும் தருவது கண்டிக்கதக்கது ஆகும்.

அமைச்சர்கள் மீது

சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர்கள் மீது நடைபெறும் சோதனை தற்போது காங்கிரஸ் கட்சி பக்கம் திரும்பி உள்ளது. இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார்.

காங்கிரசுக்கு வாங்க

மேலும் விஜயதாரணி கூறுகையில்,

ரஜினிகாந்த் பாஜகவுக்கு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக வுக்கு நிச்சயமாக ரஜினி செல்லவில்லை என்பது தெரிகிறது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு நாங்களும் அழைகிறோம்.

 

தனிக்கட்சியும் சம்மதம்

ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சியை அகில இந்திய அளவில் வழி நடத்த வேண்டும். ஒருவேளை அவர் எங்கள் கட்சியில் சேராமல், தனி கட்சி துவங்கினால் அதையும் வரவேற்போம். இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார். பாஜக பக்கம் மட்டும் ரஜினி போய்விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக உள்ளதையே விஜயதாரணி பேச்சு எடுத்துக்காட்டுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
Congress MLA Vijayatharani invites actor Rajinikanth to join Congress party.
Please Wait while comments are loading...