For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக சட்டசபை தேர்தல், வெயிட் அன்ட் சீ: சொல்வது 'தென்னவன்' விஜயகாந்த்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று சன் டிவியில் தென்னவன் படத்தை போட்டுள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் பலரும் விஜயகாந்தை வாழ்த்தியதால் #HBDcaptain என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

என்ன தான் அவரை கிண்டல் செய்தாலும் அதுவும் பாசத்தால் தான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு ரசிகர் விஜயகாந்தை அரசியல் குழந்தை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்துக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளது சன் டி.வி.

பரிசு என்றால் எதையாவது நினைக்க வேண்டாம். சன் டி.வி.யில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விஜயகாந்த் நடித்துள்ள தென்னவன் படத்தை போட்டுள்ளனர். 2016ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த படத்தை போட்டுள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையர்

தலைமை தேர்தல் ஆணையர்

படத்தில் விஜயகாந்த் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக வருகிறார். அவர் தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றவுடன் தான் செய்ய உள்ள முதல் வேலை என்று கூறுகையில், தமிழக பொது தேர்தலை நடத்த உள்ளேன். இது வழக்கமான தேர்தலாக இருக்காது, வித்தியாசமாக இருக்கும். வெயிட் அன்ட் சீ என்று தெரிவித்துள்ளார்.

சட்டம்

சட்டம்

படத்தில் அவர் 5 தேர்தல் சீர்திருத்த சட்டங்களை கொண்டு வருவது பற்றி பேசுகிறார். அவரது புதிய சட்டங்கள் மக்களை கவர்கிறது.

வேட்பாளர்

வேட்பாளர்

எந்த ஒரு வேட்பாளரும் ஒரே நேரத்தில் 2 தொகுதியில் போட்டியிடக் கூடாது என்பது தான் முதல் சட்டம்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இனிமே இடைத்தேர்தல் வந்தால் பதவியில் இருப்போர் பிரச்சாரத்திற்கு செல்லக் கூடாது. வேண்டும் என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரச்சாரம் செய்யட்டும் என்பதே இரண்டாவது சட்டம்.

ஓட்டுப்பதிவு

ஓட்டுப்பதிவு

100 சதவீத ஓட்டுப்பதிவு. ஓட்டுரிமை இருக்கும் யாரும் ஓட்டுப்போடாமல் இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாது என்பது மூன்றாவது சட்டம்.

வழக்கு

வழக்கு

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என கிரிமினல் வழக்கில் தொடர்புடைய யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது நான்காவது சட்டம் ஆகும்.

உரிமை

உரிமை

மக்களுக்கு திரும்ப அழைக்கும் உரிமை வேண்டும். அதாவது தனது தொகுதிக்கு உழைக்காத எம்.எல்.ஏ., அமைச்சர்களை வாபஸ் பெறும் அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது ஐந்தாவது சட்டம்.

English summary
Sun TV has shown Thennavan movie today as a gift to the birthday boy Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X