அப்படி என்னதான் எஃப்ஐஆரில் இருக்கு.. திரும்பத் திரும்ப பதற்றத்துடன் கேட்ட தினகரன்!

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் என்ன உள்ளது என்று செய்தியாளர்களிடமே திரும்பத் திரும்பக் கேட்டார் டிடிவி தினகரன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த டிடிவி தினகரன், எஃப்ஐஆரில் என்ன உள்ளது என்று செய்தியாளர்களிடமே அப்பாவி போல் கேட்டார்.

இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா நியமனம் தொடர்பாக டெல்லியில் சசிகலா, ஓபிஎஸ் அணியிடம் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் தினகரன் ரூ. 1.03 கோடியை லஞ்சமாக கொடுத்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

What is in FIR? asks TTV Dinakaran to Reporters

இதுகுறித்து டிடிவி தினகரன் அடையாறில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுகேஷ் சந்திரா என்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் லஞ்சம் கொடுத்ததாக ஒரு கைது செய்யப்பட்டதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன். என் சித்தி சசிகலாவை பார்க்க பெங்களூர் செல்ல ஆயத்தமாகியபோதுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. நான் போனில் யாரிடமும் பேசவில்லை என்றார் தினகரன்.

கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவுடன் போனில் நேரடியாக பேசியதாக செய்தி வந்ததே என்று செய்தியாளர்கள் கூறியதற்கு அப்படின்னு யார் சொன்னது, நீங்கள்தானே சொல்கிறீர்கள் என்று கேட்ட தினகரனுக்கு இல்லை எஃப்ஐஆரிலேயே அப்படி தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று செய்தியாளர் தெரிவித்தார்.

அதற்கு தினகரன், அப்படியா எஃப்ஐஆரில் என்ன உள்ளது என்று திரும்பத் திரும்ப அப்பாவி போல் கேட்டார்.

English summary
TTV Dinakaran innocently asks reporters that what are the things present in FIR?
Please Wait while comments are loading...