காவிரி நதிநீர் விவகாரத்தில் ஜெ., நிலைப்பாடு என்ன?... கேட்கிறார் ஸ்டாலின்

சென்னை: காவிரியில் விநாடிக்கு 6000 கனஅடிநீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா இதுவரை மவுனம் சாதித்து வருகிறார் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் 27ம் தேதிவரை விநாடிக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What is Jaya's stand in Cauvery issue, asks Stalin

இந்த தீர்ப்பை மதிக்காக கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா அனைத்து கட்சி தலைவர்களை ஆலோசனை செய்து தண்ணீர் விட முடியாது என்று அறிவித்துள்ளார்.

கர்நாடகா அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா அரசின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர் ஜெயலலிதா எதுவும் கூறாமல் மவுனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

6000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் கர்நாடாகவில் தண்ணீர் திறக்க முடியாது என்று தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் இதுபற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் அனைத்து கட்சித்தலைவர்களும் ஒன்றாக சந்தித்து பேசி ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இங்கே அப்படி எதுவுமே நடைபெறவில்லை. செய்தியாளர்கள்தான் கோட்டைக்கு சென்று முதல்வரிடம் கேள்வி எழுப்பவேண்டும் என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் ஸ்டாலினிடம் கேட்டனர். அதற்கு அவர், அது ஜி.கே.வாசனின் கருத்து என்று கூறினார்.

English summary
DMK leader MK Stalin has said that CM Jayalalitha should spell out her stand on the Cauvery issue.
Please Wait while comments are loading...

Videos